இந்திய கட்டிடக்கலை
Indian Architecture in tamil
BZ.Indian forts,
Architecture :
★ கட்டமைப்புகளை வடிவமைத்தல், செயல்முறைத் திட்டமிடல், கட்டிடங்கள் கட்டுவதை உள்ளடக்கியது
★ கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் மற்றும் அதன் உடல் கட்டமைப்புகளை வடிவமைத்தல், செயல்முறைத் திட்டமிடல், மற்றும் கட்டிடங்கள் கட்டுவதை உள்ளடக்கியதாகும்.
★ கட்டடக்கலை படைப்புகள், கட்டிடங்கள் பொருள் வடிவம், பெரும்பாலும் கலாச்சார சின்னங்களாக மற்றும் கலை படைப்புகளாக காணப்படுகின்றது. வரலாற்று நாகரிகங்கள் பெரும்பாலும் அவர்களின் கட்டிடகலை சாதனைகளின் மூலம் அடையாளம் காணப்படுகின்றன.
★ முகலாய கட்டடக்கலையின் சிறந்த மற்றும் மிகவும் நுட்பமான எடுத்துக்காட்டாக விளங்கும் தாஜ் மஹால்.
★ ஒரு விரிவான வரைவிலக்கணம், பெருமட்டத்தில், நகரத் திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் நிலத்தோற்றம் முதலியவற்றையும், நுண்மட்டத்தில், தளபாடங்கள், உற்பத்திப்பொருள் முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டிடக்கலைக்குள் அடக்கும்.
★ மேற்படி விடயத்தில், தற்போது கிடைக்கும் மிகப் பழைய ஆக்கம், கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோமானியக் கட்டடக் கலைஞரான விட்ருவியஸ் என்பாரது "கட்டிடக்கலை தொடர்பில்", என்ற நூலாகும்.
★ இவரது கூற்றுப்படி, நல்ல கட்டிடம், அழகு, உறுதி, பயன்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும். மேற்படி மூன்றும், ஒன்றின்மீதொன்று அளவுமீறி ஆதிக்கம் செலுத்தாமல், தங்களிடையே சமனிலையையும், ஒருங்கினைப்பையும் கொண்டிருத்தலே கட்டிடக்கலை என்று சொல்லலாம்.
★ ஒரு மேலான வரைவிலக்கணம், கட்டிடக்கலையைச், செயற்பாட்டு, அழகியல், உளவியல் என்பன தொடர்பான விபரங்களைக் கையாளல் என்ற விதத்தில் நோக்குகிறது. எனினும், இன்னொரு விதத்தில் பார்த்தால், செயற்பாடு என்பது, அழகியல், உளவியல் உட்பட்ட எல்லா அளபுருக்களையும் தன்னுள் அடக்குவதாகக் கொள்ளலாம்.
★ கட்டிடக்கலை, கணிதம், அறிவியல், கலை, தொழில்நுட்பம், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம், பொன்றவற்றுடன் தொடர்புள்ள, ஒரு பல்துறைக் களமாகும். விட்ருவியசின் சொற்களில், "கட்டிடக்கலையென்பது, வேறுபல அறிவியல் துறைகளிலிருந்து எழுவதும், பெருமளவு, பல்வேறுபட்ட அறிவுத்துறைகளினால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு அறிவியலாகும்.
★ இதன் உதவியைக் கொண்டே பல்வேறு கலைத் துறைகளினதும் விளைவுகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன". மேலும் ஒரு கட்டிடக் கலைஞன், இசை, வானியல் முதலிய துறைகளிலும் நல்ல பரிச்சயமுடையவனாயிருக்க வேண்டும் என்பது விட்ருவியசின் கருத்து.
★ தத்துவம் குறிப்பாக விருப்பத்துக்குரியது. உண்மையில், அணுகுமுறை பற்றிக் கருதும்போது, ஒவ்வொரு கட்டிடக் கலைஞனதும் தத்துவம் பற்றிக் குறிப்பிடுகிறோம். பகுத்தறிவியம், பட்டறிவியம், கட்டமைப்பியம், பின்கட்டமைப்பியம் மற்றும் தோற்றப்பாட்டியல் என்பன போன்ற போக்குகள், கட்டிடக்கலையில், தத்துவத்தின் செல்வாக்கைக் காட்டும் சில எடுதுதுக்காட்டுகளாகும்.