காப்ராவின் பிரமிடு
Capra's pyramid
Ancient Egyptian architecture in tamil
B.Z.Indian forts,
★ காப்ராவின் பிரமிடு (Pyramid of Khafre) பண்டைய எகிப்தின் கிசா பிரமிடுத் தொகுதிகளில் இரண்டாவது உயரமான பிரமிடு ஆகும்.
★ பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2558 முதல் கிமு 2532 முடிய 26 ஆண்டுகள் ஆண்ட எகிப்தின் நான்காம வம்ச மன்னர் காப்ரா இப்பிரமிடை நிறுவினார். இந்த பிரமிடு கீசா நகரத்தில் உள்ளது.
மன்னர் காப்ராவின் பிரமிடு
பழங்காலப் பெயர்
Wr Ḫa-f-re
Wer Khafre
Great is Khafre
வகை : True pyramid
உயரம் : 136.4 மீட்டர்கள் (448 ft)
143.5 m or 471 ft or 274 cu (original)
அடி : 215.25 மீட்டர்கள் (706 ft; 411 cu)
கனவளவு : 2,211,096 கன சதுர மீட்டர்கள் (78,084,118 cu ft)
சரிவு : 53°10'
மன்னர் காப்ரா கட்டிய பிரமிடு மற்றும் கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்
Pyramid of Khafre and Sphinx, Giza, Greater Cairo, Egypt.
★ இப்பிரமிடிவின் அடிப்பாகம் 215.5 மீட்டர் நீளமும் (706 ft) மற்றும் 136.4 மீட்டர்கள் (448 ft) உயரமும் கொண்டது.
★ இப்பிரமிடின் ஒவ்வொரு கல்லும் 2 டன் கொண்ட சுண்ணக்கல்லில் கட்டப்பட்டது. இதனருகில் கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் மற்றும் மன்னர் கூபுவின் பிரமிடும் உள்ளது.
★ எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் போது, மன்னர் காப்ராவின் பிரமிடு திறக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது.
★ 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் (கிமு 1279 - கிமு 1213) கட்டளையின் படி, காப்ராவின் பிரமிடின் பெருங்கற்களைக் கொண்டு ஹெலியோபோலிஸ் நகரத்தில் ஒரு கோயிலைக் கட்டினார்.
காப்ராவின் பிரமிடின் உட்புறக் காட்சி மற்றும் செல்லும் வழி
மன்னர் காப்ராவின் கல்லறைக் கோயிலின் 16 தூண்கள் கொண்ட மண்டபம்